சர்ச்சைக்குரிய பேச்சு காங்., பிரமுகருக்கு எதிர்ப்பு| Dinamalar

சர்ச்சைக்குரிய பேச்சு காங்., பிரமுகருக்கு எதிர்ப்பு

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
சம்பல்:''ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவோர் ராட்சசர்கள்,'' என, காங்., தலைவர் ரஷீத் ஆல்வி பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காங்., மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: நாட்டில் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் பலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஜெய் ஸ்ரீ ராம் என

சம்பல்:''ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவோர் ராட்சசர்கள்,'' என, காங்., தலைவர் ரஷீத் ஆல்வி பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்., மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: நாட்டில் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் பலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஜெய் ஸ்ரீ ராம் என கூறும் பலர் ஒழுங்காக குளிப்பது கூட இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவோர் அனைவரும் சாமியார்கள் அல்ல; அவர்கள் ராட்சசர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாளவியா கூறும்போது,''ராம பக்தர்களை ராட்சசர்கள் என கூறுவது, காங்.,காரர்களின் எண்ணம் முழுக்க விஷம் கலந்திருப்பதை காட்டுகிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X