சென்னை:'மலேஷியா சிங்கப்பூருக்கு கூடுதல் விமானங்கள் வேண்டும்' என மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தின் விபரம்: கொரோனா காரணமாக பல நாடுகளில் இந்திய பயணியர் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து மலேஷியா சிங்கப்பூருக்கு குறைந்த அளவு விமானங்கள் சென்றன.ஆனால் சென்னையில் இருந்து விமானங்கள் இன்னமும் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் மலேஷியா சிங்கப்பூர் செல்ல காத்திருப்பதால் சென்னை திருச்சியில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கை:
அண்ணாமலை வெறும் போலீஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்; தமிழகத்தை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. முல்லை பெரியாறு அணை பிரச்னை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்ட ஒன்று. அணையை உடைக்கலாம் என தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதை எதிர்த்து தமிழக மக்கள் பொங்கி எழுவர். இந்த பிரச்னை பற்றி அகரம் கூட தெரியாத அண்ணாமலைக்கு என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது.இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE