கொதிக்க வைத்த தண்ணீரை குடிங்க: பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : 'பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலர் இறையன்பு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:: பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட

சென்னை : 'பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது' என தமிழக அரசு அறிவித்துள்ளது.latest tamil news


தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலர் இறையன்பு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:: பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நல்லது.

தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரால் கழுவ வேண்டும் வெள்ள நீரில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் அருந்துதல் நலம். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.


latest tamil news


குளங்கள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பார்க்க நேர்ந்தால், உடனடியாக 104ல், பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப்பானது அல்ல. வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு தேவையின்றி போகக்கூடாது.

தேங்கிய மழை நீர் மற்றும் குப்பையை, உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும்துாய்மை பணியாளர்களுக்கு உரிய முக கவசம், கை மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும்சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை குடிக்க பயன்படுத்துவதை, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்கள், முகாமில் தரப்படும் குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். தற்காலிக முகாம்களில், கொரோனா தடுப்பு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.


ஈக்கள் கட்டுப்பாடு


குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு வைத்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும். மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுடன், பொது சுகாதாரத்துறை இணைந்து, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-202111:54:20 IST Report Abuse
அப்புசாமி மக்கள் மனமும், வயிறும் கொதிச்சுக் கிடக்கு. ஐஸ்வாட்டர் குடிச்சாலும் பொங்கிரும். அவ்வளவு சூடு.
Rate this:
Cancel
13-நவ-202109:22:09 IST Report Abuse
ராஜா மக்கள் அடுப்பே பற்றவைக்க முடியாமல் இருக்கிறார்கள், இதில் தண்ணீர் சுடவைக்க எங்கே போவது? அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது அரசின் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் தரமும், அதன் கட்டமைப்பும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-நவ-202107:17:49 IST Report Abuse
Kasimani Baskaran மின்சாரம் இல்லாததால் கும்மிருட்டில் சமையல் செய்யும் பொழுது பாம்பு, பல்லிகளையும் சேர்த்து சமைக்காமல் இருக்க வேண்டும். திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை வெள்ளம் வந்தாலாவது அடிமைகள் திருந்துவார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்த நிபுணர் குழு வந்து இன்னும் என்னென்ன காமடிகளை அறங்கேற்றப்போகிறதோ என்ற திகிலில் பொதுமக்கள். நிபுணர் புழுவை வைத்து சென்னை நகர சாக்கடை அடைப்பை நீக்க (இவர்களால் கோ பேக் என்று விரட்டப்பட்ட) மோடியிடம் மண்டியிட்டு 50 000 கோடி கேட்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X