பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை; இந்திய வானிலை மையம்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று(நவ.,13) 19 மாவட்டங்களுக்கு இந்திய வானிலைய மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தபோது ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட மழைநீர் சாலைகள், குடியிருப்புகள், சுரங்கப்பாதைகள் என சென்னை


சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று(நவ.,13) 19 மாவட்டங்களுக்கு இந்திய வானிலைய மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news


காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தபோது ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட மழைநீர் சாலைகள், குடியிருப்புகள், சுரங்கப்பாதைகள் என சென்னை முழுவதும் மழைநீர் சூழ்ந்து பொது மக்களுக்கு பெரும் இன்னல்களை கொடுத்தது.

தற்போது பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், மாநகராட்சியனர் அனைவரும் சேர்ந்து வெள்ள நீரை அகற்றி வருகி்ன்றனர்.

இந்நிலையில் நேற்றைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவிலந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது.


latest tamil news



ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதியில்(1.5 கி.மீ உயரம்) வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


19 மாவட்டங்களுக்கு கனமழை


1. வேலூர்2. ராணிப்பேட்டை3. திருப்பத்தூர்4. திருவண்ணமாலை5. கள்ளக்குறிச்சி6. நீலகிரி7. கோவை8. திண்டுக்கல்9. தேனி10. தர்மபுரி11. கிருஷ்ணகிரி12. சேலம்13. நாமக்கல்14. பெரம்பலூர்15. திருச்சி16. மதுரை17. விருதுநகர்18. தென்காசி19. கன்னியாகுமரி
இவை தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



அரபிக்கடல் பகுதிகள்


கேரள கடலோர பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 50கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடைஇடையே 60கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்துகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X