பொது செய்தி

தமிழ்நாடு

கல்வியோடு திறமையும் சேர்வதாலே சாதிப்பு ; பெண்கள் கல்வி குறித்து விளாசிய கல்லூரி மாணவிகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டைபெண்ணினத்தின் பங்கு சமூகத்தில் மிக முக்கியத்துவம்வகிக்கிறது. பெண்கள் விழிப்புணர்வுடன் நல்ல மனநிலையுடன் ஆரோக்கியமான உடல்நிலையுடன் வாழும் போது தான், அடுத்ததலைமுறையின் நன்மையை நம்மால் உறுதிபடுத்த முடியும். ஆணுக்கு இருக்கின்ற அதே அளவு புத்திசாலித்தனம் பெண்ணுக்கும் இருக்கிறது. அவர்களுக்கு வெளியுலக தொடர்பு, நல்ல கல்வி கிடைத்தாக வேண்டும். ஆணும்,

அருப்புக்கோட்டைபெண்ணினத்தின் பங்கு சமூகத்தில் மிக முக்கியத்துவம்வகிக்கிறது. பெண்கள் விழிப்புணர்வுடன் நல்ல மனநிலையுடன் ஆரோக்கியமான உடல்நிலையுடன் வாழும் போது தான், அடுத்ததலைமுறையின் நன்மையை நம்மால் உறுதிபடுத்த முடியும். ஆணுக்கு இருக்கின்ற அதே அளவு புத்திசாலித்தனம் பெண்ணுக்கும் இருக்கிறது.

அவர்களுக்கு வெளியுலக தொடர்பு, நல்ல கல்வி கிடைத்தாக வேண்டும். ஆணும், பெண்ணும் முழுமையான மனித இனமாக மாறுகின்ற போது தான் நல்ல தாயாக பரிணமிக்க முடியும். திறமை பெண்ணிற்கு கிடைக்கும். இந்த மாற்றத்தை தான் படிப்படியாக கொண்டு வந்து தற்போது ஆணுக்கு நிகராக பெண்கள் உள்ளனர். பல் துறைகளிலும் சாதிக்கின்றனர். பெண்கள் இல்லாத துறைகளே தற்போது இல்லை என்ற அளவிற்கு பெண்கள் தங்களை உயர்த்தி கொண்டுள்ளனர். இதற்கு பெண்கள் கல்வி பயிலுவதுடன் கூடவே திறமைகளையும் வளர்த்து கொண்டு அதிபுத்திசாலியாக உள்ளனர். கல்வி அறிவினால் மட்டும் சாதனை படைக்க இயலுமா என்ற கேள்விக்கு, கல்வி அறிவு இருந்தாலும் அதை பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தி முன்னேற திறமையும் வேண்டியுள்ளது. கல்வி அறிவு குறைந்து இருந்தாலும் தனது திறமையால் சாதித்து காட்டிய பெண்கள் பலர் உள்ளனர்.பெண்கள் சாதிக்க தேவை கல்வியா, திறமையா என அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை அறிவியில் கல்லுாரி மாணவிகள் அலசி, ஆராய்ந்தபோது அவர்களிடம் கிடைத்த தகவல்கள் இதோ...இரண்டும் அவசியமேரேணுகாதேவி, எம்.காம்., : இக்காலத்தில் கல்வி மட்டும் போதாது. பணிக்கு தேவையான கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ளுதல் அவசியம். ஆளுமை, தலைமை பண்பு, ஆங்கில புலமை உள்ளிட்ட மென்திறன்கள் இவை அனைத்தும் முன்னேற துடிக்கும் பெண்களுக்கு அவசியம். படிப்பு என்பது பணிக்கான அடிப்படை தகுதி. நாம் பணிக்கு செல்லும் நிறுவனங்கள் எதிர் பார்க்கும் தகுதிகளை கூடவே வளர்த்து கொள்ள வேண்டும். சாதிக்க தேவை கல்வியேசுஜிதா, பி.எஸ்.சி., மாணவி: சங்க காலத்தில் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும். வீரத்திலும் சிறந்து விளங்கியதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் உள்ளன. கல்வி பெறுவதற்கு வாழ்வு நெடுகிலும் போராட வேண்டியிருந்தது. இதில் வெற்றி பெற்று கல்வியை கற்று சிறந்து விளங்கிய பெண்களும் அந்த காலத்தில் இருந்துள்ளனர். அந்த காலத்தில் அவ்வையாரை உதாரணமாக கூறலாம். கல்வியை போராடி கற்று 1875ல் பிரிட்டனின் முதல் மருத்துவரானமேரி ஆன் டகாம்ப் ஷார்ல்ப் லை கூறலாம். கஸ்துாரிபா காந்தி அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனையை நிறுவியரும் இவரே. கல்வி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.திறமையே முக்கியம்சுவேதா, பி.எஸ்.சி., : அந்தகாலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் சாதிக்காததுறைகளே இல்லை. பெண்கள் வீட்டில் இருந்த காலம் மாறி ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பல வலிமையான பெண்கள் வெளிப்பட்டு வரலாற்றில் ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். இதற்கு கல்வி ஒரு காரணமாக இருந்தாலும் தங்களுக்குள் உள்ள திறமையால் தான் அதை வெளி கொண்டு வந்துள்ளனர். இன்றைக்கு பெண்கள் அதிக அளவில் படித்து வந்தாலும் திறமைகள் இருக்கிற பெண்களே மென்மேலும் உச்சத்தை தொடுகின்றனர்.சாதிக்கும் பெண்கள்அபிராமி, பி.காம்: கல்வியறிவு, இவற்றுடன் தெளிவான திட்டமிடல், வேலையில் தெளிவு, நேர்மறை சிந்தனை, பகிர்ந்து கொள்ளுதல், உற்சாகம், நிபுணத்துவம்,பொறுப்பேற்றல் போன்ற 8 சூத்திரங்களை, கற்ற கல்வியோடு பயன்படுத்தி வரும் பெண்களே சாதனை புரிந்து வருகின்றனர். கல்வி, திறமை இரண்டும் தனிதனியாக இருந்தால் பயன் இல்லை. இவை இரண்டும் சேரும்போது சாதிக்கலாம். இவற்றை தான் சாதித்த பெண்களின் பின்புலமாக இருந்துள்ளது.மேலும் மேலும் சாதிக்கலாம்சிந்துஜா, பி.ஏ., : தேர்ந்தெடுத்த கல்வி முறை, தான் வளர்த்துக் கொண்ட திறமைகளால் சாதனை படைத்து வரும் பெண்கள் பலர் உள்ளனர். தனது திறமையால் எச்.சி.எல்.,நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும்,ரூ. 36, 800 கோடி சொத்திற்கு அதிபதியாகி முதல் பெண் கோடீஸ்வரி என்ற பெயர் பெற்ற ரோஷன்நடாம், கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவராக உள்ள ஸ்மீதா சாதித்து காட்டியுள்ளனர். கல்வியையும், திறமையையும் ஒன்றாக இணைத்து கல்வி,திறமை இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு செயல்பட்டால் பெண்கள் இன்னும் சாதிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X