பொது செய்தி

தமிழ்நாடு

சிகரெட் அட்டையில் புகையிலை விழிப்புணர்வு; உலக சாதனை படைத்த அருப்புக்கோட்டை மாணவி

Added : நவ 13, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டைபுற்று நோய்க்கு முக்கிய காரணமே புகையிலைதான் . பெரும்பாலானோர் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என தெரிந்தும் புகை பிடிக்கின்றனர். சிகரெட் பாக்கெட்களில் கூட புகையிலை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் இதிலிருந்து விடுபடவில்லை.புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த

அருப்புக்கோட்டைபுற்று நோய்க்கு முக்கிய காரணமே புகையிலைதான் . பெரும்பாலானோர் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என தெரிந்தும் புகை பிடிக்கின்றனர். சிகரெட் பாக்கெட்களில் கூட புகையிலை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் இதிலிருந்து விடுபடவில்லை.புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி 11 ம் வகுப்பு மாணவி அஸ்மா அஹமத், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஒழிக்கும் நோக்கத்துடன் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆயிரம் சிகரெட் பெட்டிகளை சேகரித்து, அதில் புகையிலை ஒழிப்பு சம்பந்தமான வாசகங்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். பள்ளி வளாகத்தில் இதற்கென 3 நாட்கள்முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார். அதற்குரிய ஆவணங்களை வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெகார்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அந்நிறுவனம் மாணவியின் சாதனையை பாராட்டி சான்றிதழ், தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.சாதனை மாணவியை தேவாங்கர் மகாஜன சபை தலைவர் மாணிக்கவாசகம், செயலர் ரவிசங்கர், பள்ளி செயலர் மணிமாறன், தலைமை ஆசிரியை தவமணி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X