நடவடிக்கை எடுங்க ; ரோடுகளில் திரியும் கால்நடைகளால் ஆபத்து

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராஜபாளையம், நவ. 13-விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகர்களில் ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுக்காததால் இந்நிலை தொடர்கிறது.மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகர்கள் , கிராம பகுதிகளில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இதனால் ரோட்டோரம் ,பொது இடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றி

ராஜபாளையம், நவ. 13-விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகர்களில் ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுக்காததால் இந்நிலை தொடர்கிறது.மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகர்கள் , கிராம பகுதிகளில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இதனால் ரோட்டோரம் ,பொது இடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக கிராமப் பகுதியில் உள்ளோர் இடப்பிரச்னையால் தாங்கள் வளர்த்துவரும் கால்நடைகளை திறந்தவெளியில் கட்டிவைத்து சுகாதாரமற்ற முறையில் பராமரித்து வருகின்றனர். காலையில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை விரட்டி விடுவதுடன் ஆங்காங்கே புற்களை மேய்ந்து விட்டு மாலையில் தானாக வீடு வந்து சேர்ந்து விடுகின்றன.இது தவிர சில கால்நடைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளை ஆக்கிரமித்து நிற்பதால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்கள் தொடர்கின்றன.வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை அப்புறப்படுத்த உள்ளாட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பறிமுதல் செய்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்...............தினமும் தொல்லையேஅரசின் உதவிகளை பெற்று கால்நடைகளை வாங்குவோர் வீட்டில் இடம் இல்லாத பிரச்னை, பராமரிப்பு காரணங்களுக்காக ரோட்டில் மேய விடுகின்றனர். இதனால் வாகனங்களில் வருவோர் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மேய்ச்சல் நிலங்களில் செல்ல வேண்டிய கால்நடைகள், ரோடுகளில் சுற்றி திரிவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம்தான் தீர்வு காண வேண்டும்.முத்தீஸ்வரன், தொழில் முனைவோர், ராஜபாளையம்.....................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X