பொது செய்தி

தமிழ்நாடு

உதவும் உள்ளங்கள்; தொடரும் உதவிகள்; மகத்தான பணியில் மம்சாபுரம் குழு

Added : நவ 13, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்மம்சாபுரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், பிறருக்கு உதவும் நல்லெண்ணங்கள் படடைத்த இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைந்து மம்சாபுரம் சமூக சேவை குழு பெயரில் தனிக்குழு ஏற்படுத்தி, இதன்மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல், மரக்கன்றுகள் நட்டு பசுமை ஆக்குதல், ரத்த தானம் செய்தல் போன்ற அரும்பணிகளை எவ்வித விளம்பரமும் இன்றி

ஸ்ரீவில்லிபுத்துார்மம்சாபுரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், பிறருக்கு உதவும் நல்லெண்ணங்கள் படடைத்த இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைந்து மம்சாபுரம் சமூக சேவை குழு பெயரில் தனிக்குழு ஏற்படுத்தி, இதன்மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல், மரக்கன்றுகள் நட்டு பசுமை ஆக்குதல், ரத்த தானம் செய்தல் போன்ற அரும்பணிகளை எவ்வித விளம்பரமும் இன்றி செய்து வருகின்றனர்.கொரோனோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தினசரி ஆதரவற்றவர்களை தேடி சென்று உணவும் அளித்து வருகின்றனர். 556 நாட்களை கடந்தும் இன்றுவரை தொடர்கிறது. இது உணவு பெற முடியாத வறியவர்களின் வயிற்று பசியை நீக்கி வருகிறது.தீபாவளியை முன்னிட்டு இரண்டாம் ஆண்டாக ஆதரவற்றவர்களை தேடி சென்று உடை வழங்கி, அவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் வறியவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தியது, நிதி உதவி செய்தவர்கள், நேரடியாக உதவியவர்களின் குடும்பத்திற்கு பெரும் புண்ணியத்தை சேர்த்துள்ளது. இதை பின்பற்றி மற்றவர்களும் ஏழைகள் ,ஆதரவற்றவர்கள், முதியோர்களின் நலன் காக்கலாமே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X