போலீஸ் செய்திகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
வரதட்ணையால் பெண் பலி: மறியல்நரிக்குடி: உச்சனேந்தலை சேர்ந்தவர் மகாதேவி 20. புதையனேந்தலை சேர்ந்த முத்துராஜாவை காதலித்து, 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கணவர் முத்துராஜா கொடுமைப்படுத்தியதாக கூறிய அவரது

வரதட்ணையால் பெண் பலி: மறியல்நரிக்குடி: உச்சனேந்தலை சேர்ந்தவர் மகாதேவி 20. புதையனேந்தலை சேர்ந்த முத்துராஜாவை காதலித்து, 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கணவர் முத்துராஜா கொடுமைப்படுத்தியதாக கூறிய அவரது உறவினர்கள், அவரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து திருச்சுழியில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மதியழகன், இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.லாட்டரி விற்றவர் கைதுஸ்ரீவில்லிபுத்துார்: தடை லாட்டரி சீட்டுகளின் நம்பர்களை துண்டு சீட்டுகளில் எழுதி விற்பனை செய்த கம்மாபட்டியை சேர்ந்த பழனிராஜனை டவுன் எஸ்.ஐ.,மாரியப்பன் கைது செய்து, ரூ. 2,280ஐ பறிமுதல் செய்தார்.கஞ்சா விற்ற பெண்கள் கைதுஸ்ரீவில்லிபுத்துார்: தேரடி பஸ் ஸ்டாப் பகுதியில் டவுன் எஸ்.ஐ., மாரியப்பன் சோதனையில், சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த வன்னியம்பட்டி கச்சம்மாளிடமிருந்து 600 கிராம், பவுன்தாயிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, இருவரையும் கைது செய்தார்.சிவகாசி: ரத்னா விலாஸ் பஸ் ஸ்டாப் அருகில் கீழ திருத்தங்கல் செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்த மணிகண்டன் 27, நாரணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் 22, கஞ்சா விற்பனை செய்தனர். கிழக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.பள்ளி மாணவி மாயம்சிவகாசி: திருத்தங்கல் எம்.ஜி.ஆர். நகர் கண்ணகி காலனியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, சிவகாசியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். வழக்கம்போல பள்ளிக்கு சென்றவர் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.-----------ஏ.டி.எம்.கார்டை திருடி பணம் அபேஸ்சிவகாசி: சிவகாசி கிழக்கு சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் 39. இவரது நண்பர்களான மருது பாண்டியர் மேற்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் 30, காளீஸ்வரன் 28 , ஆகியோர் , வீட்டில் வைத்திருந்த இவரது மனைவி ஏ.டி.எம். கார்டினை திருடி வங்கி கணக்கிலிருந்து ரூ. 28 ஆயிரம் திருடினர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மோதி சகோதரிகள் காயம்சிவகாசி: சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரி 48, சுப்புத்தாய் 50 . சகோதரிகளான இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு காளையார்குறிச்சி கண்மாய் கரை அருகே நடந்து சென்றனர். திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் காயம் அடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைக்கு முயன்ற விவசாயிகாரியாபட்டி:கீழஉப்பிலிகுண்டுவை சேர்ந்தவர் சிவசந்தியா. இவருக்கு சொந்தமான இடத்தை, இவரது உறவினர் வருவாய் அலுவலர்களின் உதவியால் போலி ஆவணங்கள் தயார் செய்து பட்டா மாறுதல் செய்தார். இதை ரத்து செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த சிவசந்தியா காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இன்ஸ்பெக்டர் மூக்கன், எஸ்.ஐ., அசோக் குமார் காப்பாற்றினர். பட்டா மாறுதலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க துணை தாசில்தார் சிவக்குமார், போலீசார் தெரிவித்தனர்.பெண்ணிடம் நகை பறிப்புசாத்துார்: கோவில்பட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் சண்முகராஜ் மனைவி முத்தம்மாள் 48. பாரதிநகர் சேர்ந்தவர் ராமராஜ் மனைவி வெள்ளைத்தாயம்மாள் 41. இருவரும் உறவினர்கள். சாத்துார் மேல ஒட்டம்பட்டி உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். வெள்ளைத்தாயம்மாள் ஒட்டி வர முத்தம்மாள் பின்னால் இருந்தார். சடையம்பட்டி சாய்பாபா கோயில் அருகில் வரும் போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் முத்தம்மாளின் 6 பவுன் தாலி செயினை பறித்தனர். தாலியை பிடித்து கொண்டதால் அறுந்தது. கையில் சிக்கிய 2 அரை பவுன் தங்க சங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பும் போது, எட்டி உதைத்ததில் பெண்கள் இருவரும் காயமடைந்தனர்.தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X