பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளபட்டியில் துாய்மை பணிகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிவகாசி- -தினமலர் செய்தி எதிரொலியாக பள்ளபட்டி ஊராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இவ்ஊராட்சியில் சாக்கடை துார்வாரப்படவில்லை, குப்பை அகற்றப்படவில்லை என்பன உட்பட பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்படுவதாக, தினமலர் உங்கள் ஊராட்சி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி தலைவர் உசிலைசெல்வம் மேற்பார்வையில் ஊராட்சி முழுவதுமே துாய்மை பணிகள்

சிவகாசி- -தினமலர் செய்தி எதிரொலியாக பள்ளபட்டி ஊராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இவ்ஊராட்சியில் சாக்கடை துார்வாரப்படவில்லை, குப்பை அகற்றப்படவில்லை என்பன உட்பட பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்படுவதாக, தினமலர் உங்கள் ஊராட்சி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி தலைவர் உசிலைசெல்வம் மேற்பார்வையில் ஊராட்சி முழுவதுமே துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சாக்கடை துார்வாரப்பட்டது. பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பை அகற்றப்பட்டது.* இதுபோல் அம்மன் கோவில்பட்டி தெற்கு தெரு பகுதி ஓடை பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி நீர் செல்ல தடையாக இருந்தது . தினமலர் இன்பாக்ஸ் பகுதியில் நேற்று செய்தி வெளியானது. இதைதொடர்ந்து கமிஷனர் லலிதாமணி உத்தரவின்படி சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் மேற்பார்வையில் துாய்மை பணியாளர்கள் ஓடையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X