பொது செய்தி

தமிழ்நாடு

நிலையூர் கால்வாயில் தண்ணீர்; அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை

Added : நவ 13, 2021
Share
Advertisement
காரியாபட்டி--வைகை ஆற்றிலிருந்து நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.காரியாபட்டி பகுதியில் தொடர் மழை பெய்தும் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்காததால் பல்வேறு கண்மாய்கள் நீர் இன்றி வறண்டு உள்ளன. இந்நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், ஆவியூர், கம்பிக்குடி,

காரியாபட்டி--வைகை ஆற்றிலிருந்து நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.காரியாபட்டி பகுதியில் தொடர் மழை பெய்தும் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்காததால் பல்வேறு கண்மாய்கள் நீர் இன்றி வறண்டு உள்ளன. இந்நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், ஆவியூர், கம்பிக்குடி, மாங்குளம், அரசகுளம், குரண்டி கண்மாய் பாசன விவசாயிகள் நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் கோரினர். அதன்படி நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விட ஆனைகுளம் கண்மாய் நிரம்பி வருகிறது. இக்கண்மாய் நிரம்பி மாங்குளம், ஆவியூர், குரண்டி, அரசகுளம் கண்மாய் நிரம்பி பெரிய கண்மாயான கம்பிக்குடி கண்மாய்க்கும் தண்ணீர் வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அமைச்சர் ஆலோசனைப்படி தி.மு.க., ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், சிதம்பர பாரதி, ஊராட்சி தலைவர் சிவசக்தி, விவசாயிகள் முதன்மை செயற்பொறியாளரை சந்தித்ததின்படி, வரத்துக் கால்வாயில் ஏற்படும் உடைப்பு சரி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X