பொது செய்தி

தமிழ்நாடு

மழையில் கரைந்த சிமென்ட் ரோடு; காட்சிப்பொருளாக நுாலகம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சாத்துார்--மழையில் கரைந்த சிமென்ட் ரோடு, காட்சி பொருளாக நுாலகம் என வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிப்பாறை ஊராட்சியில் உள்ள வால்சாபுரம் மக்கள் வசதிகளின்றி தவிக்கின்றனர்.மேலசத்திரத்தில் இருந்து சிப்பிப்பாறை செல்லும் ரோட்டில் உள்ளது வால்சாபுரம் .மெயின்ரோட்டிலிருந்து ஊருக்கு செல்ல ரோடு வசதியில்லை. மண் சாலையாக உள்ளது. தெருக்களில் போடப்பட்டிருந்த சிமென்ட் ரோடுகள்

சாத்துார்--மழையில் கரைந்த சிமென்ட் ரோடு, காட்சி பொருளாக நுாலகம் என வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிப்பாறை ஊராட்சியில் உள்ள வால்சாபுரம் மக்கள் வசதிகளின்றி தவிக்கின்றனர்.மேலசத்திரத்தில் இருந்து சிப்பிப்பாறை செல்லும் ரோட்டில் உள்ளது வால்சாபுரம் .மெயின்ரோட்டிலிருந்து ஊருக்கு செல்ல ரோடு வசதியில்லை. மண் சாலையாக உள்ளது. தெருக்களில் போடப்பட்டிருந்த சிமென்ட் ரோடுகள் மழையில் கரைந்து போனதால் பள்ளம் மேடாக உள்ளது.கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக கட்டப்பட்ட தொட்டி தண்ணீரின்றி, பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக மாறிவிட்டது. இக்கிராமமக்களின் புழக்கத்திற்காக அமைக்கப்பட்ட அடி குழாய் பழுதடைந்த நிலையில் உள்ளது.சாக்கடைகள் கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. தண்ணீர் ஒடும் ஒடைப்பாதையின் குறுக்கே பேவர் பிளாக்கல் பதித்துள்ளனர். இதனால் மழை தண்ணீருடன் சாக்கடை கலந்து குளம் போல் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசுக்கள் கடிப்பதால் மக்கள் பல் வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X