பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு பணிகள் கண்காணிப்பு கூட்டம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
விருதுநகர் -விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத்தலைவர் எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி, தென்காசி எம்.பி.,தனுஷ் எம்.குமார், ராமநாதபுரம் எம்.பி.,நவாஸ்கனி, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன் (விருதுநகர்), அசோகன்(சிவகாசி), ரகுராமன்(சாத்தூர்) முன்னிலையில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த

விருதுநகர் -விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத்தலைவர் எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி, தென்காசி எம்.பி.,தனுஷ் எம்.குமார், ராமநாதபுரம் எம்.பி.,நவாஸ்கனி, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன் (விருதுநகர்), அசோகன்(சிவகாசி), ரகுராமன்(சாத்தூர்) முன்னிலையில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.மத்திய அரசின் திட்டங்களான எம்.பி., தொகுதி மேம்பாட்டுத்திட்டம், சான்சத் ஆதார்ஷ் - கிராம யோஜானா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மேற்கொள்ள உள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்தும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.டி.ஆர்.ஓ.,மங்களராமசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, சிவகாசி சப்கலெக்டர் பிரிதிவிராஜ், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தெய்வேந்திரன் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X