பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் வீடு திட்டத்தில் நவ.17, 18ல் பயனாளிகள் தேர்வு

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் நவ.17, 18 ல் பயனாளிகள் தேர்வு நடைபெற உள்ளது.நகராட்சி எல்லையில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை, ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கும் நகர்ப்புற ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.பட்டணம்காத்தான் ஊராட்சியில் 256 அடுக்குமாடி

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் நவ.17, 18 ல் பயனாளிகள் தேர்வு நடைபெற உள்ளது.நகராட்சி எல்லையில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை, ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கும் நகர்ப்புற ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.பட்டணம்காத்தான் ஊராட்சியில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு குடியிருப்புக்கான செலவுத்தொகை மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக பயனாளி பங்குத் தொகையான ரூ. 82 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும்.குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மனையோ, வீடோ இல்லை என்றும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு கீழ் எனவும் பயனாளிகள் உறுதி அளிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குடும்பத் தலைவர், தலைவி ஆகியோரின் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X