நவ.19ல் கார்த்திகை விழா; பரமக்குடியில் பல டிசைன்களில் விளக்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவ.19ல் கார்த்திகை விழா; பரமக்குடியில் பல டிசைன்களில் விளக்கு விற்பனை

Added : நவ 13, 2021
Share
பரமக்குடி-- கார்த்திகை தீப விழா நவ.19ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், பரமக்குடியில் பல டிசைன்களில் விளக்குகள் விற்பனை நடந்து வருகிறது.கார்த்திகை என்றாலே தீபங்களின் வரிசை நினைவுக்கு வரும். அந்த வகையில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் மாதம் முழுவதும் வீட்டின் சுவாமி அறை தொடங்கி வாசல்கள் அனைத்திலும் விளக்குகளை ஏற்றி வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் மண்ணால் செய்யப்பட்ட புதிய அகல்

பரமக்குடி-- கார்த்திகை தீப விழா நவ.19ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், பரமக்குடியில் பல டிசைன்களில் விளக்குகள் விற்பனை நடந்து வருகிறது.கார்த்திகை என்றாலே தீபங்களின் வரிசை நினைவுக்கு வரும். அந்த வகையில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் மாதம் முழுவதும் வீட்டின் சுவாமி அறை தொடங்கி வாசல்கள் அனைத்திலும் விளக்குகளை ஏற்றி வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் மண்ணால் செய்யப்பட்ட புதிய அகல் விளக்குகளை வாங்குவர்.பரமக்குடி ஐந்து முனை ரோடு, பெரிய பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 5 விளக்குகள் 10 ரூபாய் தொடங்கி, பெரிய விளக்குகள் ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முகம், ஐந்து முகம், தேங்காய், நாகம் பாவை விளக்குகள் என அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நவ.19 அன்று கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று சிவன், முருகன் உள்ளிட்ட அனைத்து கோயில்களையும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X