பயிர் இன்சூரன்ஸ் சர்வர் முடக்கம்; விவசாயிகள் அவதி| Dinamalar

பயிர் இன்சூரன்ஸ் சர்வர் முடக்கம்; விவசாயிகள் அவதி

Added : நவ 13, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம்-பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கான சர்வரில், நேற்று அதிகாலை முதல் ஆதார் சேவை பதிவு ஆகாததால், பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பயிர் செய்துள்ள விவசாயிகள் தொடர் மழையால், பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டால், அதை ஈடுசெய்யும் வகையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி

ஆர்.எஸ்.மங்கலம்-பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கான சர்வரில், நேற்று அதிகாலை முதல் ஆதார் சேவை பதிவு ஆகாததால், பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பயிர் செய்துள்ள விவசாயிகள் தொடர் மழையால், பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டால், அதை ஈடுசெய்யும் வகையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பயிர் இன்சூரன்ஸ் செய்யும் சர்வரில் விவசாயிகளின் தகவல்களை உறுதி செய்யும்,ஆதார் சேவை செயல்படாததால் பயிர் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடைசி நேரத்தில் பயிர் இன்சூரன்ஸ் பதிவில் ஆதார் சேவை தடைபட்டுள்ளதால் ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X