கடலாடி அரசு கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலாடி அரசு கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை

Added : நவ 13, 2021
Share
கடலாடி--கடலாடி அரசு கலைக்கல்லுாரியில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.கடலாடி அரசு கலைக்கல்லுாரியில் நிரந்தர முதல்வர் இல்லை. பொறுப்பு முதல்வர் தான் நிர்வகிக்கிறார்.தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் என ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலாம் ஆண்டில் 250 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம்

கடலாடி--கடலாடி அரசு கலைக்கல்லுாரியில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.கடலாடி அரசு கலைக்கல்லுாரியில் நிரந்தர முதல்வர் இல்லை. பொறுப்பு முதல்வர் தான் நிர்வகிக்கிறார்.தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் என ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலாம் ஆண்டில் 250 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 620 பேர் உள்ளனர்.தமிழில் 7 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 3 கவுரவ விரிவுரையாளர்கள், ஆங்கிலத்தில் 7 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 4 கவுரவ விரிவுரையாளர்கள் என்ற எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். முழுமையான பாடங்களை எடுப்பதிலும், செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை முடிப்பதிலும் சிரமம் உள்ளது.மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X