பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--4 நாட்களுக்கு பின் சூறாவளி காற்று தணிந்ததால் பாம்பனில் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்பினர்.வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நவ.,8 முதல் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்தது. ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை தடை

ராமேஸ்வரம்--4 நாட்களுக்கு பின் சூறாவளி காற்று தணிந்ததால் பாம்பனில் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்பினர்.வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நவ.,8 முதல் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்தது. ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை தடை விதித்தது.இந்நிலையில் தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரை கடந்ததால், கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் மேக மூட்டம் விலகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். 4 நாட்களுக்கு பின் நேற்று அதிகாலை பாம்பனில் நாட்டுபடகில் மீன்பிடிக்கு சென்று நேற்று மதியம் மீனவர்கள் கரை திரும்பினர். கடலில் நீரோட்டம் மாறியதால், எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி குறைவாக முரல், சூடை மீன்கள் மட்டுமே சிக்கியது என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X