ஏலம் விடப்பட்ட சேலைகள் ஆர்வமுடன் வாங்கிய பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏலம் விடப்பட்ட சேலைகள் ஆர்வமுடன் வாங்கிய பக்தர்கள்

Added : நவ 13, 2021
Share
காரைக்குடி--காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், முதன்முறையாக அம்மனுக்கு காணிக்கையாக வந்த பரிவட்டங்களை இந்து அறநிலையத்துறையினர் ஏலம் மூலம் விற்பனை செய்தனர்.காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் நடக்கும் பால்குட திருவிழா புகழ் பெற்றதாகும். இந்துசமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள

காரைக்குடி--காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், முதன்முறையாக அம்மனுக்கு காணிக்கையாக வந்த பரிவட்டங்களை இந்து அறநிலையத்துறையினர் ஏலம் மூலம் விற்பனை செய்தனர்.காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் நடக்கும் பால்குட திருவிழா புகழ் பெற்றதாகும். இந்துசமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, பக்தர்கள் பலரும் காணிக்கையாகவும், நேர்த்திக்கடனாகவும் பட்டு உள்ளிட்ட பலவகை சேலைகளை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.காணிக்கையாக செலுத்தப்பட்ட இவற்றை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்கு இந்துசமய அறநிலையத்துறை முதன்முறையாக அனுமதி அளித்தது. நேற்று பட்டுச்சேலைகள், காட்டன் சேலைகள், பூனம் சேலைகள் என மொத்தம் 80 சேலைகள் ஏலத்தில் விடப்பட்டது. சேலைகள் ரூ.57 ஆயிரத்து 666 க்கு விற்பனை செய்யப்பட்டது.செயல்அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி, ஆய்வர் வினோத் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர். பிரதிமாதம் 2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில் ஏலம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X