அரசு பஸ் கண்ணாடி உடைப்பு  10 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு  10 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது

Added : நவ 13, 2021
Share
சிவகங்கை--சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக 10 பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நவ.,10 ல் கல்லல் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பில்லப்பன் மகன் பிரகலாதன், டூவீலரில் சென்ற போது பஸ் மோதி சம்பவ இடத்தில் இறந்தார். இவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு ஆம்புலன்சில்

சிவகங்கை--சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக 10 பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நவ.,10 ல் கல்லல் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பில்லப்பன் மகன் பிரகலாதன், டூவீலரில் சென்ற போது பஸ் மோதி சம்பவ இடத்தில் இறந்தார். இவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு ஆம்புலன்சில் கல்லலுக்கு எடுத்து சென்றனர். அப்போது ஆம்புலன்சுடன் சென்ற கல்லல் அருகே கீழக்கோட்டை ஜெகநாதன் மகன் அழகுராஜா 31, சேகர் மகன் செந்தில்நாதன் 36, கல்லல் இந்திரா நகர் செல்வம் மகன் மணிகண்டன் 23, மற்றொரு மணிகண்டன் 23, பன்னீர்செல்வம் 24 உட்பட 10 பேர் சென்றனர்.மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து சிவகங்கைக்கு வந்த அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். மதகுபட்டி இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X