பொது செய்தி

தமிழ்நாடு

பட்டமங்கலத்தில் குரு பெயர்ச்சி தீபாராதனை

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருக்கோஷ்டியூர்-பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.குருத்தலங்களுள் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் பட்டமங்கலம். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இன்று மாலை 6:21 மணிக்கு குருபகவான் மகர

திருக்கோஷ்டியூர்-பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.குருத்தலங்களுள் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் பட்டமங்கலம். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இன்று மாலை 6:21 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்கிறார்.குருபெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 5:30 மணி முதல் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்குகிறது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து ஆலமரத்தடியில் எழுந்தருளியுள்ள உற்ஸவருக்கு அர்ச்சனை நடைபெறும். மதியம் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். மாலை 6:21 மணிக்கு குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் ராஜகோபுரம், வடக்கு கோபுரம், மூலவர் விமானத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X