பொது செய்தி

தமிழ்நாடு

இளையான்குடி ஒன்றிய தலைவர் கைப்பற்ற தி.மு.க., திட்டம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
இளையான்குடி-இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்ததை தொடர்ந்து தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.,வினர் முயன்று வருவதால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் 9 இடங்களை அ.தி.மு.க., கைப்பற்றி அக்கட்சியை

இளையான்குடி-இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்ததை தொடர்ந்து தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.,வினர் முயன்று வருவதால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் 9 இடங்களை அ.தி.மு.க., கைப்பற்றி அக்கட்சியை சேர்ந்த முனியாண்டி தலைவராக பதவியில் உள்ளார்.தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் பெரும்பச்சேரி முருகன் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது தி.மு.க.,வின் பலம் 8 ஆக அதிகரித்த நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க., கவுன்சிலரான வடக்கு அண்டக்குடியைச் சேர்ந்த சண்முகம், அமைச்சர் பெரியகருப்பன்,எம்.எல்.ஏ., தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.தற்போது இளையான்குடி ஒன்றியத்தில் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்களின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து தி.மு.க.,வினர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற முயன்று வருவதால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X