பொது செய்தி

தமிழ்நாடு

15 ஆண்டுக்குப் பிறகு மறுகால் பாயும் பறவைகள் சரணாலய கண்மாய்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி-சிங்கம்புணரி அருகே பறவைகள் சரணாலய கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது.இவ்வொன்றியத்தில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 33 ஏக்கர் பரப்புள்ள கொள்ளுக்குடி கண்மாய் இந்த ஆண்டு மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.2005 ல் பெருமழை காரணமாக இக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய

சிங்கம்புணரி-சிங்கம்புணரி அருகே பறவைகள் சரணாலய கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது.இவ்வொன்றியத்தில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 33 ஏக்கர் பரப்புள்ள கொள்ளுக்குடி கண்மாய் இந்த ஆண்டு மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.2005 ல் பெருமழை காரணமாக இக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதற்கு பிறகு இப்போதுதான் நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு வந்த வெளிநாட்டு பறவைகள் திரும்பிச் செல்லாமல் கண்மாயிலேயே தங்கின. இதன் காரணமாக இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் நம்பினர். அதேபோல் வடகிழக்கு பருவமழை துவக்கத்திலேயே கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய் நிரம்பி, பறவைகளோடு சேர்ந்து விவசாயிகளும் உற்சாகத்தில் உள்ளனர்.ஏற்கனவே தங்கிய பறவைகளோடு செப்டம்பரில் புதிதாக வந்த பறவைகளும் சேர்ந்து கூடுகட்ட தொடங்கியுள்ளன. வழக்கமாக இங்கு வரும் பறவைகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ராமநாதபுரம் கடற்கரை பகுதி வரை சென்று இரை தேடி திரும்பும். தற்போது இப்பகுதியிலேயே தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் இங்கேயே இரையை தேடிக் கொள்கின்றன. கூடுதல் மழை இல்லாத காலங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து போதுமானதாக இருக்காது. எனவே எருமைப்பட்டி வழியாக ஓடும் மணிமுத்தாறு மற்றும் முல்லை பெரியாறு கால்வாய்கள் மூலம் ஆண்டுதோறும் இக்கண்மாயில் தண்ணீரை நிரப்பி சரணாலயம் மேம்பட தமிழக அரசு உதவ வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X