சிவகங்கை-சிவகங்கை நகராட்சி மீனாட்சிநகர், ராமசாமி நகர் பகுதிகளில் 500 குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானதால் நகராட்சி அதிகாரிகள் மழை நீர் வடிகால் அமைத்து மழை நீரை வெளியேற்றினர்.சிவகங்கை நகராட்சிப்பகுதியில் உள்ள மீனாட்சிநகர், ராமசாமி நகர், கே.பி.கே., நகர் பகுதியில் 500 குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டனர். வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். அப்பகுதி மக்கள் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்த செய்தி தினமலர் இதழில் நவ., 8 ல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியினை பார்வையிட்ட நகராட்சி அதிகாரிகள் மழை நீரை வடிப்பதற்காக கால்வாய் அமைத்து மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக தீர்வு காண முடியாத பிரச்னை முடிவுக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தற்காலிகமாக மட்டுமே வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மழை பெய்யும் போது இப்பகுதிகள் பாதிக்கப்படும், என்பதால் நிரந்தரமாக வடிகால் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும், என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE