பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அடைவு திறன் தேர்வு 212 மையத்தில் 6897 பேர் பங்கேற்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிவகங்கை-மாவட்டத்தில் 212 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தேசிய அடைவு திறன் (நேஷனல் ஆடிடியூட் சர்வே) தேர்வினை 6,897 மாணவர்கள் எழுதினர்.புதிய கல்வி திட்டங்களை வகுக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி கற்கும் திறன், வாழ்வியல் சிந்தனை குறித்து கொள்குறி வகை தேர்வினை நடத்தி சர்வே செய்ய மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக என்.சி.ஆர்.டி., தகுதியிலான வினாக்களை தயாரித்து 3, 5, 8

சிவகங்கை-மாவட்டத்தில் 212 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தேசிய அடைவு திறன் (நேஷனல் ஆடிடியூட் சர்வே) தேர்வினை 6,897 மாணவர்கள் எழுதினர்.புதிய கல்வி திட்டங்களை வகுக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி கற்கும் திறன், வாழ்வியல் சிந்தனை குறித்து கொள்குறி வகை தேர்வினை நடத்தி சர்வே செய்ய மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக என்.சி.ஆர்.டி., தகுதியிலான வினாக்களை தயாரித்து 3, 5, 8 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவு திறன் (நாஸ் தேர்வு) தேர்வினை நேற்று நடத்தினர்.சிவகங்கை மாவட்ட அளவில் 212 மையங்களில் நடந்த தேர்வினை அரசு, உதவி பெறும், மெட்ரி., சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என 271 பள்ளிகளை சேர்ந்த 6,897 மாணவர்கள் எழுதினர். இதில் 3ம் வகுப்பிற்கு 47, 5 ம் வகுப்பிற்கு 53, 8 ம் வகுப்பிற்கு 60, 10 ம் வகுப்பிற்கு 70 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு கொள்குறிவகை முறைப்படி விடை அளித்தனர். இதில் 3 மற்றும் 5 ம் வகுப்பிற்கு காலை 10:00 முதல் மதியம் 12:00, 8 மற்றும் 10 ம் வகுப்பிற்கு காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வுகள் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X