பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் அதிர்ஷ்டம் தரும் அஷ்டமங்கலம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பழநி"பவனி வரவே யுகந்து மயிலின்மிசையேதிகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீராபரமபதமே செறிந்த முருகனெனவே யுகந்துபழநி மலைமேல் அமர்ந்த பெருமாளே"'உலகைச் சுற்றிவரமயிலின் மீதேறி, பூமி அதிர நடந்த வீரக்கழலை அணிந்த,மோட்ச வீடென பொருந்தி நிற்கும் பழநி மலையின்மேல் அமர்ந்த பெருமானே' என அருணகிரிநாதர் புகழ்ந்த முருகப் பெருமானின் முக்கிய தலம் பழநி.இந்தப் பழநியை

பழநி"பவனி வரவே யுகந்து மயிலின்மிசையேதிகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீராபரமபதமே செறிந்த முருகனெனவே யுகந்துபழநி மலைமேல் அமர்ந்த பெருமாளே"'உலகைச் சுற்றிவரமயிலின் மீதேறி, பூமி அதிர நடந்த வீரக்கழலை அணிந்த,மோட்ச வீடென பொருந்தி நிற்கும் பழநி மலையின்மேல் அமர்ந்த பெருமானே' என அருணகிரிநாதர் புகழ்ந்த முருகப் பெருமானின் முக்கிய தலம் பழநி.இந்தப் பழநியை சுற்றியுள்ள பகுதிகள் வையாபுரி நாடு என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் கோயிலைச் சுற்றி எட்டு திசைகளிலும் கிராமங்கள் அமைக்கப்பட்டன. அவை: சண்முக மங்கலம், கோதைமங்கலம், கொத்தமங்கலம், அமிர்த மங்கலம், ஆனந்தமங்கலம், இமய மங்கலம், இரைய மங்கலம், சதுர்வேத மங்கலம் எனப்பட்டன.அக்காலத்தில் கோயில்களுக்கும், கோயில்களை பராமரிக்கும் குருக்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது. இந்நிலங்களுக்கு 'மங்கலம்' எனப் பெயர். அவ்வகையில் எட்டு திசைகளிலும் உள்ள 'அஷ்டமங்கல'ங்களில் அமைந்துள்ள ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்கள் உள்ளன. இந்த மங்கலங்களில் சில தற்போது வேறு பெயர்களிலும், சில அதே பெயரிலும் அழைக்கப்படுகின்றன.சிவாலயங்கள் உள்ள நிலங்களை சதுர்வேதமங்கலம் எனக் கூறுவர். சதுர்வேதமங்கலம் என்பது நான்கு வேதங்களையும் அறிந்த குருமார்கள் வாழ்ந்து சிவாலயங்களை நிர்வகித்த பகுதி. இம்மங்கலங்களில் பாண்டிய, சேர, சோழ, நாயக்க மன்னர்கள் சிவன் கோயில்களை பராமரித்து உள்ளனர்.இந்த அஷ்டமங்கலங்களே கல்வெட்டு, வரலாற்றுச் சான்றுகளில் எல்லா சோழ சதுர்வேதிமங்கலம், அவனி வேந்தராம சதுர்வேதிமங்கலம், இரவிமங்கலம், ஸ்ரீமங்கலம், வீரகேரளா சதுர்வேதி மங்கலம், அமர புயங்க சதுர்வேதி மங்கலம், சண்முக மங்கலம், ஆனந்த மங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.இவற்றில் சில தமது இயல்பு திரிந்து அழிந்துவிட்டதால், புனரமைத்து கட்டப்பட்டுள்ளன. சில ஹிந்து அறநிலைத்துறை சார்பிலும், சில தனியார் சார்பிலும் பராமரிக்கப்படுகின்றன. சில கோயில்களில் ஒரு கால பூஜை மட்டும் நடக்கின்றன.இதுகுறித்து பழநி வன்னி விநாயகர் கோயில் சுந்தரேச குருக்கள் கூறியதாவது: பழநியைச் சுற்றிலும் அஷ்ட மங்கலங்கள் உள்ளன. மங்கலங்கள் இரண்டு வகைப்படும். கோயில் பராமரிப்புக்கும் பூஜைகளுக்கும் தரப்படும் நிலங்கள் தேவதா மங்கலம் என்றும், கோயில்களை பராமரிப்பவர்களுக்கும் பூஜை செய்பவர்களுக்கும் தரப்படும் நிலங்கள் பிரம்ம மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள அஷ்டமங்கல கோயில்கள் தற்போது ஆயக்குடி, பாலசமுத்திரம், இரவிமங்கலம், கண்ணாடிப்புத்தூர், தாமரைக்குளம், மானூர், கீரனூர், கோதைமங்கலம் பகுதிகளில் இருப்பதாக தெரிய வருகிறது" என்றார்.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறிய தாவது: எல்லா சோழ சதுர்வேதிமங்கலம் என்பது கோதைமங்கலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிக்கிறது. கோதைமங்கலம் பற்றி பெரியாவுடையார் கோயில் கல்வெட்டில் வீர நாராயண அதிசய சோழன், வீரகேரள அதிஇராசராசன், அமர புயங்கன் அரசர்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அவனி வேந்தராம சதுர்வேதி மங்கலம் என்பது ஆயக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிக்கிறது. இது பழநி மலைக்கோயிலில் ஐந்தாவது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரவிமங்கலம் பற்றி பழநி மலைக் கோயில் 6வது கல்வெட்டில் மல்லிகார்ஜுன ராயர் அரசர் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீமங்கலம், ஸ்ரீவல்லபன் குறித்து பெரிய ஆவுடையார் கோயில் 16வது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரகேரளா சதுர்வேதி மங்கலம் என்பது கலைய முத்தூர் சுற்றியுள்ள பகுதியை குறிக்கிறது. இது பெரிய ஆவுடையார் கோயில் 14 வது கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது. அமர புயங்க சதுர்வேதி மங்கலம், தாமரைக்குளம் சுற்றியுள்ள பகுதிகளை குறிக்கிறது. இதுகுறித்தும் பெரியாவுடையார் கோயில் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது" என்றார்.இப்படி பழநியைச் சுற்றிலும் உள்ள எட்டு சிவன்கோயில்களை வணங்கும் வாய்ப்பே அதிர்ஷ்டமான ஒன்று. இதனால் அக்காலத்தில் பிரசித்தி பெற்றவையாக இவை திகழ்ந்துள்ளன. இவற்றை தொல்லியல் துறை உதவியுடன் கண்டறிந்து, ஒருங்கிணைந்த சிவன் தலங்களாக பரிணமிக்க செய்யலாம். ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X