சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூவனுாத்தில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சாணார்பட்டி-கூவனுாத்து அருகே குளக்காரன்பட்டியில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிரால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.சாணார்பட்டி, நத்தம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கூவனுாத்து, குளக்காரன்பட்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் நெல் மணிகள் முளைவிடும் அவல நிலை

சாணார்பட்டி-கூவனுாத்து அருகே குளக்காரன்பட்டியில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிரால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.சாணார்பட்டி, நத்தம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கூவனுாத்து, குளக்காரன்பட்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் நெல் மணிகள் முளைவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் வேலை ஆட்கள் பற்றாக்குறையால் அதிக செலவு செய்து வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்கின்றனர். பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.குளக்காரன்பட்டி விவசாயி அழகர் கூறியது: ஒரு சில விவசாயிகள் மழைக்கு முன்பே அறுவடை செய்து விட்டனர். தாமதமாக பயிரிட்டவர்களுக்கு தற்சமயம் அறுவடை காலம். மழை வந்ததால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதில், எனக்கு 1.50 ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி மழைக்கு தப்பிய கதிர்களை அறுவடை செய்கிறோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X