பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு

Added : நவ 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-பருவமழையை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்ளுதல், சுகாதாரமில்லாத குடிநீரை குடிப்பதால் காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.இது மட்டுமின்றி,

திண்டுக்கல்-பருவமழையை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்ளுதல், சுகாதாரமில்லாத குடிநீரை குடிப்பதால் காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.இது மட்டுமின்றி, கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 பேர் வரை உள் நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெறலாம். தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.டாக்டர்கள் கூறுகையில், ''மாவட்டத்தில் தற்போது வரை காய்ச்சல், டெங்கு பாதிப்பு இல்லை. காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுயமாக மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடுவது கூடாது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அவசியம். சுகாதாரமான உணவு, குடிநீரை பருகுவது அவசியம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X