சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திர அலுவலகத்தில் தர்ணா

Added : நவ 13, 2021
Share
Advertisement
வடமதுரை-பத்திரப்பதிவை வேண்டுமென்றே தாமதம் செய்வதாக கூறி பொதுமக்கள் அலுவலக வாயிலை மறித்து போராட்டம் செய்தனர்.வடமதுரை மேற்கு ரதவீதியை சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான நிலம் சுக்காம்பட்டியில் உள்ளது. அருகிலிருந்த நிலத்தை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முயன்றனர். உரிய அளவீடு செய்தபின்னரே பதிய வேண்டும் என்று விஜயலட்சுமி எதிர்ப்பு

வடமதுரை-பத்திரப்பதிவை வேண்டுமென்றே தாமதம் செய்வதாக கூறி பொதுமக்கள் அலுவலக வாயிலை மறித்து போராட்டம் செய்தனர்.வடமதுரை மேற்கு ரதவீதியை சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான நிலம் சுக்காம்பட்டியில் உள்ளது. அருகிலிருந்த நிலத்தை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முயன்றனர். உரிய அளவீடு செய்தபின்னரே பதிய வேண்டும் என்று விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார். இதனால் அந்த பத்திரம் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவரான கோதண்டபாணி நேற்று வேறொரு பத்திரத்தை பதிய தந்துள்ளார். சார்பதிவாளர் பதிவதற்கு தாமதம் செய்தார். இதனால் கோதண்டபாணி மற்றும் பொதுமக்கள் சிலர் சார்பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். பேச்சுவார்த்தை நடத்திய சார்பதிவாளர் திருப்பதி, இணையதள கோளாறால் பத்திரப்பதிவு தடைபட்டுள்ளது,சரியானதும் பதிவு செய்து தருவதாக கூறி போராட்டத்தை கைவிட செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X