நிலக்கோட்டையில் மழையால் மல்லிகை பாதிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை--நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியங்களில் தொடர் மழையால் மல்லிகை செடியிலேயே அழுகி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.இப்பகுதியில் மல்லிகைப்பூ 3000 ஏக்கரில் சாகுபடியாகிறது. சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் பூச்செடிகள் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. செடியிலேயே கருகி மொட்டுகள் உதிர்வதால் மலர் சாகுபடி குறைந்துள்ளது.வழக்கமாக 5 கிலோ கிடைக்க

நிலக்கோட்டை--நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியங்களில் தொடர் மழையால் மல்லிகை செடியிலேயே அழுகி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.இப்பகுதியில் மல்லிகைப்பூ 3000 ஏக்கரில் சாகுபடியாகிறது. சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் பூச்செடிகள் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. செடியிலேயே கருகி மொட்டுகள் உதிர்வதால் மலர் சாகுபடி குறைந்துள்ளது.வழக்கமாக 5 கிலோ கிடைக்க வேண்டிய செடிகளில் 2 கிலோ கிடைப்பதே அரிதாக உள்ளது. பூக்கள் கருகியும், மஞ்சள் நிறத்திற்கும் மாறுவதால் விலை கிடைக்கவில்லை. பூக்கள் மகசூல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து மல்லிகை கிலோ ரூ.1,500 க்கு விற்கிறது.விசேஷ நாட்களில் மல்லிகையின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர். இந்நேரத்தில் சாகுபடி குறைந்ததை நினைத்து மல்லிகை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தோட்டக்கலைத் துறையினர் அழுகல் நோய்க்கு நிவாரணம் கிடைக்க வழி செய்யவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X