ராணுவ நிரந்தர கமிஷனில் மேலும் 11 பெண் அதிகாரிகள்; மத்திய அரசு

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : அடுத்த 10 நாட்களில் மேலும், 11 ராணுவ பெண் அதிகாரிகள் நிரந்தர கமிஷனில் சேர்க்கப்பட உள்ளதாக, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் நிரந்தர கமிஷனில் இருப்பவர்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம். அதேசமயம் குறுகியகால சேவை கமிஷனில், 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன் பின் ஓய்வு பெறலாம் அல்லது நிரந்தர கமிஷனில்

புதுடில்லி : அடுத்த 10 நாட்களில் மேலும், 11 ராணுவ பெண் அதிகாரிகள் நிரந்தர கமிஷனில் சேர்க்கப்பட உள்ளதாக, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


ராணுவத்தில் நிரந்தர கமிஷனில் இருப்பவர்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம். அதேசமயம் குறுகியகால சேவை கமிஷனில், 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன் பின் ஓய்வு பெறலாம் அல்லது நிரந்தர கமிஷனில் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்பட்சத்தில், மேலும் நான்கு ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெறலாம்.

இதன்படி, ராணுவத்தின் குறுகியகால சேவை கமிஷனில் இடம் பெற்றிருந்த 71 பெண் அதிகாரிகள் நிரந்தர கமிஷனில் சேர்க்கக் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த 39 பெண் அதிகாரிகளை நிரந்தர கமிஷனில் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், நிரந்தர கமிஷனில் சேர்க்க தகுதியற்றோர் என கூறுவதற்கான காரணங்களை மூன்று மாதங்களுக்குள் அளிக்கும்படி மத்திய அரசுக்கு 'கெடு' விதித்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மேலும், 11 பெண் அதிகாரிகள் 10 நாட்களுக்குள் நிரந்தர கமிஷனில் சேர்க்கப்பட உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடாத பெண் அதிகாரிகளையும், மூன்று வாரங்களில் நிரந்தர கமிஷனில் சேர்க்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராணுவம் சந்திக்க நேரும் எனவும், உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan - Madurai,இந்தியா
13-நவ-202112:34:07 IST Report Abuse
Priyan . இந்த அணுகுமுறை நல்லதல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X