தமிழ்நாடு

அழைப்பு: திண்டுக்கல்லில் மரம் நட விவசாயிகளுக்கு...பசுமை பரப்பு மற்றும் வருமானம் பெருக்க...

Added : நவ 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்' என்ற பெயரில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் ஆண்டுமுழுதும் கூடுதல் வருமானம் பெற, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வழி
  அழைப்பு: திண்டுக்கல்லில் மரம் நட விவசாயிகளுக்கு...பசுமை பரப்பு மற்றும் வருமானம் பெருக்க...

திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்' என்ற பெயரில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் ஆண்டுமுழுதும் கூடுதல் வருமானம் பெற, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வழி வகுக்கும்.இத்திட்டத்தில் நடவு செய்ய தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு, இலவம், குமிழ், புளிய மரக்கன்றுகள் வனத்துறையின் கீழ் உள்ள அரசு நாற்றங்காலில் தயார் நிலையில் உள்ளது.

விவசாயிகள் மரக்கன்றுகளை பெற, அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, தேவையான மரக்கன்றுகளை வனத்துறை நாற்றங்காலில் இலவசமாக பெறலாம்.'வரப்பு நடவு முறை' எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலத்தில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மரக்கன்றுகளை பராமரிக்க ஊக்கத்தொகையாக 2-4 ஆண்டுகள் வரை மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வழங்கப்படும்.

மரக்கன்றுகள் வருவாய்த்துறை அடங்கல் பதிவேட்டில் பதியப்படும்.சிறு குறு, பெண், ஆதிதிராவிடர், பழங்குடி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 'உழவன் செயலி' வாயிலாக பதிவு செய்தும் மரக்கன்றுகளை பெறலாம். இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு வருவாயும், பசுமை பரப்பும் அதிகரித்து சுற்றுச்சூழல் மேம்படும். மரக்கன்று விநியோகம், நடவுப்பணிகள் அரசு இணைய தள செயலி வாயிலாக கண்காணிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X