தமிழ்நாடு

ஏலக்காய் சீசன் முன்கூட்டியே முடிவு: விவசாயிகள் பாதிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கம்பம்--ஏலக்காய் சீசன் முன்கூட்டியே முடிவதால் ஏல விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என புலம்பி வருகின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. பெரும்பாலும் கம்பம் பகுதியை சேர்ந்தவர்களிடம் ஏலத் தோட்டங்கள் உள்ளன. ஏலக்காய் பறிப்பு ஆண்டு தோறும் ஜூலை முதல் ஆகஸ்டில் துவங்கி ஜனவரி அல்லது பிப்ரவரியில் முடிவிற்கு வரும். ஒவ்வொரு பறிப்பிற்கும்

கம்பம்--ஏலக்காய் சீசன் முன்கூட்டியே முடிவதால் ஏல விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என புலம்பி வருகின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. பெரும்பாலும் கம்பம் பகுதியை சேர்ந்தவர்களிடம் ஏலத் தோட்டங்கள் உள்ளன. ஏலக்காய் பறிப்பு ஆண்டு தோறும் ஜூலை முதல் ஆகஸ்டில் துவங்கி ஜனவரி அல்லது பிப்ரவரியில் முடிவிற்கு வரும்.

ஒவ்வொரு பறிப்பிற்கும் இடைவெளி 45 முதல் 50 நாட்கள் இருக்க வேண்டும். இந்தாண்டு காய்பறிப்பு இப்போதே முடிவிற்கு வந்துள்ளது. அதிகபட்சம் டிசம்பர் வரை காய்பறிப்பு அங்காங்கே இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஏலக்காய் முன்னோடி விவசாயி அருண்பிரசாத் கூறுகையில், ஏலச்செடிகளுக்கு 50 சதவீத மழை, 50 சதவீத வெயில் கிடைக்க வேண்டும். அப்போது தான் காய்பிடிப்பு நன்றாக இருக்கும். பூ பூக்கும் சமயத்தில் மழை பெய்ததால், பூக்கள் உதிர்ந்து காய் பிடிப்பு குறைந்துள்ளது. எனவே, முன்கூட்டியே சீசன் முடிவிற்கு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X