பொது செய்தி

இந்தியா

நிமோனியா தடுப்பூசியில் இந்தியா வளர்ச்சி: ஹாப்கின்ஸ் பல்கலை பாராட்டு

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா பெருந்தொற்று சவாலை எதிர்கொண்ட நேரத்திலும் கூட, குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது' என, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.உலக நிமோனியா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பொது சுகாதாரத்திற்கான
World Pneumonia Day 2021, pneumonia vaccines, India, ohns Hopkins University, PCV

புதுடில்லி : 'கொரோனா பெருந்தொற்று சவாலை எதிர்கொண்ட நேரத்திலும் கூட, குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது' என, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலக நிமோனியா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பொது சுகாதாரத்திற்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மற்ற கொடிய நோய்களுடன் ஒப்பிடும் போது நிமோனியா மற்றும் வயிற்று போக்கினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.


latest tamil news


தாய் பால் புகட்டுவது குழந்தைகளை இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாக்கிறது. இந்தியாவில் நிமோனியா மற்றும் வயிற்று போக்கினால் 5 வயதுக்கு உட்பட்ட இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 240 குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 640 குழந்தைகள் இறக்கின்றனர்.

நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, 'நிமோகோக்கல் கான்ஜுகேட்' என்ற தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி வழங்கும் விகிதம் 2019ல் இந்தியாவில் 15 சதவீதமாக இருந்தது. இது 2020ம் ஆண்டில் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும், 'ரோட்டா வைரஸ்' பாதிப்பில் இருந்து பாதுகாக்க ரோட்டா வைரஸ் தடுப்பூசி போடப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்று சவால் இருந்த நேரத்திலும், குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
13-நவ-202114:44:54 IST Report Abuse
raja "கொரோனா பெருந்தொற்று சவாலை எதிர்கொண்ட நேரத்திலும் கூட, குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது' என, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது".... இது மோடியின் நிர்வாகம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X