மூணாறு--இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இரண்டாம்கட்ட வெள்ள எச்சரிக்கையாக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டது.கேரளாவில் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையில் அக்.19ல் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. அன்று அணையின் நீர்மட்டம் (மொத்த உயரம் 554)398.86 அடியாக இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அக்.22ல் இரண்டு மதகுகளும், எஞ்சிய மதகுஅக்.27லும்அடைக்கப்பட்டன. தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.நேற்று நீர்மட்டம் 398.32 அடியாக அதிகரித்தததால் இரண்டாம்கட்ட வெள்ள எச்சரிக்கையாக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டது.''அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடரும் பட்சத்தில் இன்று (நவ.13) மாலை அல்லது நாளை காலை அணை திறக்கப்பட்டு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என்பதால் செருதோணி அணையின் கீழ் வசிப்போரும், பெரியாற்றின் கரையோர மக்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு'' இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் முன்னெச்சரிக்கை விடுத்தார்.-------------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE