பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் கழிவு நீர்; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை -மதுரை நெல்லியேந்தல்பட்டி தவமணி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை யானைமலை ஒத்தக்கடை வழியாக பாசன கால்வாய் மூலம் கடம்பக்குடி மற்றும் நெல்லியேந்தல் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.கால்வாயில் சிலர் கழிவுநீரை கலக்க விடுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. விவசாயம் பாதிக்கிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை

மதுரை -மதுரை நெல்லியேந்தல்பட்டி தவமணி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை யானைமலை ஒத்தக்கடை வழியாக பாசன கால்வாய் மூலம் கடம்பக்குடி மற்றும் நெல்லியேந்தல் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.கால்வாயில் சிலர் கழிவுநீரை கலக்க விடுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. விவசாயம் பாதிக்கிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை கலெக்டருக்கு மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: கழிவுநீர் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X