பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் தைலகாப்பு உற்சவம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை-அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளை(நவ.,14) முதல் நவ.,16 வரை தைலகாப்பு உற்ஸவம் நடக்கிறது. நவ.,14 மாலை 6:15 முதல் இரவு 7:15 மணிக்குள் சுவாமிக்கு தைலகாப்பு உற்ஸவம் துவங்குகிறது. நவ.,15ல் மேட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்திநாதன் சேவை நடக்கிறது. நவ.,16 காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் அலங்காரம் முடிந்து பல்லக்கில் நுாபுர கங்கைக்கு சுவாமி புறப்பாடுகிறார். காலை 11:00 மணிக்கு ராக்காயி அம்மன்

மதுரை-அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளை(நவ.,14) முதல் நவ.,16 வரை தைலகாப்பு உற்ஸவம் நடக்கிறது. நவ.,14 மாலை 6:15 முதல் இரவு 7:15 மணிக்குள் சுவாமிக்கு தைலகாப்பு உற்ஸவம் துவங்குகிறது. நவ.,15ல் மேட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்திநாதன் சேவை நடக்கிறது. நவ.,16 காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் அலங்காரம் முடிந்து பல்லக்கில் நுாபுர கங்கைக்கு சுவாமி புறப்பாடுகிறார். காலை 11:00 மணிக்கு ராக்காயி அம்மன் கோயிலில் எழுந்தருளுகிறார்.காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்குள் சுவாமிக்கு தைலம் சாத்தி, நுாபுரகங்கையில் தீர்த்தவாரி நடக்கும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. மதியம் 1:00 மணிக்கு சுந்தரராஜபெருமாள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். உற்ஸவத்தை www.alagarkoil.org, www.tnhrce.gov.in ல் பக்தர்கள் காணலாம் என துணை கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.தீப உற்ஸவம்கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவம் நவ.,18 மாலை 6:15 முதல் இரவு 7:15 மணிக்குள் நடக்கிறது. அழகர்மலை உச்சியில் வெள்ளி மலையாண்டி கோயில் கோம்பை கொப்பரையில் 200 லிட்டர் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்படும். பக்தர்களுக்கு அனுமதியில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X