பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 220 பள்ளிகளில் 'நாஸ்' தேர்வு: சி.பி.எஸ்.இ., 'அப்சர்வர்கள்' கண்காணிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை -மதுரையில் 220 பள்ளிகளில் 'நாஸ்' (தேசிய அச்சிவ்மென்ட் சர்வே) என்ற மாணவர்களுக்கான தேசிய அடைவு தேர்வு நடந்தது.மாணவர் கல்வி அடைவு திறனை கண்டறியும் வகையில் மத்திய அரசால் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் அரசு உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 'ரேண்டமாக' 220 பள்ளிகளில் மூன்று, ஐந்து, எட்டு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடந்தது. இரண்டு மணிநேரம் நடந்த

மதுரை -மதுரையில் 220 பள்ளிகளில் 'நாஸ்' (தேசிய அச்சிவ்மென்ட் சர்வே) என்ற மாணவர்களுக்கான தேசிய அடைவு தேர்வு நடந்தது.

மாணவர் கல்வி அடைவு திறனை கண்டறியும் வகையில் மத்திய அரசால் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் அரசு உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 'ரேண்டமாக' 220 பள்ளிகளில் மூன்று, ஐந்து, எட்டு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடந்தது. இரண்டு மணிநேரம் நடந்த பத்தாம் வகுப்புக்கு 70, எட்டாம் வகுப்புக்கு 60 மதிப்பெண்ணுக்கும், ஒன்றரை மணிநேரம் நடந்த ஐந்தாம் வகுப்புக்கு 53, மூன்றாம் வகுப்புக்கு 47 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்பட்டன. முதல்முறையாக இத்தேர்வை கண்காணிக்க சி.பி.எஸ்.இ., சார்பில் 'அப்சர்வர்கள்' நியமிக்கப்பட்டனர்.மாவட்ட நோடல் அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பி.எட்., கல்லுாரி மாணவர்கள் என 311 பேர் தேர்வை நடத்தினர். மதுரை கே.வி.,பள்ளி முதல்வர் செல்வராஜ் தேர்வை ஒருங்கிணைத்தார்.'இத்தேர்வில் கொரோனா பேரிடரால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை அறியும் வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக' ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X