பயமுறுத்தும் பாதாள சாக்கடை மூடி மேடு பள்ளமாக மாறிய ரோடுகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் மழையால் ரோடுகள் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து நோயாளிகளை பயமுறுத்துகின்றன. பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து ஓட்டைகளாக காட்சியளிக்கின்றன.குழந்தைகளுக்கான காய்ச்சல் வார்டு செல்லும் வழியில் பக்கவாட்டில் கழிப்பறை உள்ளதால் கால் கழுவும் தண்ணீர் வார்டு முன்புறம் தேங்கியுள்ளது. சுகாதார பணியாளர்கள் தண்ணீரை தள்ளி சுத்தம் செய்தாலும்

மதுரை-மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் மழையால் ரோடுகள் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து நோயாளிகளை பயமுறுத்துகின்றன.

பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து ஓட்டைகளாக காட்சியளிக்கின்றன.குழந்தைகளுக்கான காய்ச்சல் வார்டு செல்லும் வழியில் பக்கவாட்டில் கழிப்பறை உள்ளதால் கால் கழுவும் தண்ணீர் வார்டு முன்புறம் தேங்கியுள்ளது. சுகாதார பணியாளர்கள் தண்ணீரை தள்ளி சுத்தம் செய்தாலும் ஈரம் அப்படியே இருப்பதால் வார்டுக்கு செல்பவர்கள் வழுக்கி விழுகின்றனர். கைதிகள் வார்டிலிருந்து டயாலிசிஸ் வார்டுக்கு செல்லும்வழியில் டைல்ஸ் ரோடுகள் ஓரடி பள்ளம், ஓரடி மேட்டில் இருப்பதால் ஸ்ட்ரெச்சரில் வரும் நோயாளிகள் நிலை பரிதாபமாக உள்ளது.

தீக்காய வார்டு முன்புறமுள்ள பாதாளசாக்கடை மூடி அரித்து ஓட்டைகளாக உள்ளதால் தற்காலிகமாக மரக்கட்டைகளை வைத்துள்ளனர். மனநோய் பிரிவு நுழைவுவாயிலில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.மருத்துவமனை பராமரிப்புக்காக பொதுப்பணித்துறை பிரிவு செயல்படுகிறது. கட்டுமானம் கட்டுவதற்கு முன்பாக மழைநீர் வடிகால் உள்ளதா என்பதை ஆராய்ந்தால் மழை பெய்யும் போதெல்லாம் இப்படி தண்ணீர் தேங்காது. கட்டடங்களின் வெளிப்புறத்தில்ஆங்காங்கே நீர்கசிவுஏற்பட்டு பாசி பிடித்துள்ளது.

டீன் ரத்தினவேல் கூறியதாவது: மனநோய் பிரிவு முன் தேங்கும் தண்ணீரை தினமும் மோட்டாரால் உறிஞ்சி வெளியேற்றுகிறோம். பாதாள சாக்கடை மூடி உடனடியாக சரி செய்யப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X