பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பின்றி கால்வாய்; வறண்டுள்ள கண்மாய்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மேலுார்-மேலுார் அருகே இ.மலம்பட்டியில் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் முறையாக பராமரிக்காததால் இப்பகுதி கண்மாய்கள் வறண்டுள்ளன.இங்குள்ள இடையன் கண்மாய்க்கு பெரியாறு 11 வது கிளை கால்வாய் வழியாக தண்ணீர் வரும். இக்கண்மாய் மறுகால் பாய்ந்து நவாக்குடி, கொசத்தலை, அய்யங்கண்மாய், சாத்தனி, எறிச்சி, குறிச்சி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். இக்கண்மாய்கள் மூலம் 650

மேலுார்-மேலுார் அருகே இ.மலம்பட்டியில் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் முறையாக பராமரிக்காததால் இப்பகுதி கண்மாய்கள் வறண்டுள்ளன.இங்குள்ள இடையன் கண்மாய்க்கு பெரியாறு 11 வது கிளை கால்வாய் வழியாக தண்ணீர் வரும். இக்கண்மாய் மறுகால் பாய்ந்து நவாக்குடி, கொசத்தலை, அய்யங்கண்மாய், சாத்தனி, எறிச்சி, குறிச்சி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். இக்கண்மாய்கள் மூலம் 650 ஏக்கர் பயன்பெறும். கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்கள் அழிப்பால் கண்மாய்கள் வறண்டுள்ளன.விவசாயிகள் கூறுகையில், 'வரத்து கால்வாய்களை கிரானைட் குவாரி நிறுவனத்தினர் சேதப்படுத்தியதால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பவில்லை.இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம்குறைவதுடன் கால்நடைகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X