பொது செய்தி

தமிழ்நாடு

தன்னம்பிக்கை உள்ளவர்களை எந்த பலவீனமும் பாதிக்காது: சுவாமி சிவயோகானந்தா பேச்சு

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை-தன்னம்பிக்கை உள்ளவர்களை எந்த பலவீனமும் பாதிக்காது என சிவயோகானந்தா பேசினார்.மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக நேற்று கணபதி ஹோமம் ,ஆவஹந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. அபிஷேகம்.அலங்காரம். அர்ச்சனை தீபாராதனை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை யக்ஷனின் கேள்வி பதில்கள் என்ற தலைப்பில்

மதுரை-தன்னம்பிக்கை உள்ளவர்களை எந்த பலவீனமும் பாதிக்காது என சிவயோகானந்தா பேசினார்.மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக நேற்று கணபதி ஹோமம் ,ஆவஹந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. அபிஷேகம்.அலங்காரம். அர்ச்சனை தீபாராதனை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை யக்ஷனின் கேள்வி பதில்கள் என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியது: இவ்வுலகில் தனியாக, ஆற்றலுடன் சஞ்சரிப்பவர் யார் என்னும் யக் ஷனின் கேள்விக்கு, சூரியன் என்று பதிலளிக்கின்றார் தர்மர். தன்னகத்தே பூரண ஆற்றலும், நம்பிக்கையும் உடையோர் சூரியனைப் போன்று கம்பீரமாக தனித்தன்மையுடன் விளங்குகின்றனர். எந்த பலவீனமும் இவர்களை பாதிப்பதில்லை.சூரியன் இருளை அகற்றுவது போல இவர்கள் தங்களைச் சுற்றி இருப்போரின் அறியாமை என்னும் இருளை நீக்கி, அறிவூட்டும் ஒளியாகப் பிரகாசிக்கின்றனர். தர்மம் தவறாது, தனக்கிட்ட பணியை நாள்தோறும் செய்து வருவதால் இருளகற்றும் மாபெரும் சக்தியாக சூரியன் விளங்குகின்றது. அதுபோன்று அறம் பிறழாது வாழ்வோர்க்கும் அச்சக்தியினை கடவுள் வழங்குகின்றான். சூரியனைப் போன்று அருளும், ஆற்றலும் மிக்கவர்களாக அனைவரும் வாழ வேண்டும். இவ்வாறு பேசினார்.மடத்தின் மதுரை கிளை தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தர், பொருளாளர் ஸ்ரீ குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X