போலீஸ் செய்திகள்...

Added : நவ 13, 2021
Share
Advertisement
வைகையில் உடல் மீட்புமதுரை: செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு மீனாட்சிசுந்தரம் 43. சலவைத்தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் மாடுகளை விரட்ட முயன்ற போது வைகை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். நேற்று மாலை திருமலைராயர் படித்துறை பாலம் அருகில் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.கொள்ளை திட்டம்: மூவர் கைதுமதுரை: செல்லுார் உதவிகமிஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்

வைகையில் உடல் மீட்புமதுரை: செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு மீனாட்சிசுந்தரம் 43. சலவைத்தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் மாடுகளை விரட்ட முயன்ற போது வைகை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். நேற்று மாலை திருமலைராயர் படித்துறை பாலம் அருகில் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.கொள்ளை திட்டம்: மூவர் கைதுமதுரை: செல்லுார் உதவிகமிஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கூடல்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். கொள்ளை, வழிப்பறி செய்ய திட்டமிட்டு பதுங்கியிருந்த மீனாட்சிபுரம் ரவி 25, கே.வி.சாலை விக்னேஷ் 27, அருள்தாஸ்புரம் மணிவண்ணன் 34, ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோ, 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மருது, குமாரை தேடி வருகின்றனர். போலீசாரை வடக்கு துணைகமிஷனர் ராஜசேகரன் பாராட்டினார்.வழிப்பறி திருடர்கள் கைதுமதுரை: ஜெய்ஹிந்த்புரம் ரமாபிரபா. இவரது அலைபேசியை டூவீலரில் வந்த 2 பேர் பறித்துச்சென்றனர். விசாரணையில் அவர்கள் ஹீராநகர் பெருமாள் 18, பாலாஜி 19,எனத்தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கரிமேடு, ஜெய்ஹிந்த்புரத்தில் நகைபறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மதுபாட்டில்கள் பறிமுதல்மேலுார் : கீழையூர் பகுதியில் கீழவளவு போலீசார் ரோந்து சென்ற போது வீட்டில் அனுமதியின்றி மது விற்ற லட்சுமி தப்பி விட்டார். அங்கிருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர் கைதுகொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டி மாணிக்கம் 56, ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டல் முன் உறவினர் இந்திராணியிடம் சிவகங்கை மாவட்டம் பாகனேரி சூர்யா 25, மேலுார் கஸ்துாரிபாய் நகர் சரவணன் 24, கொடுத்த பணத்தை கேட்டு தகராறு செய்தனர். இதை மாணிக்கம் தட்டி கேட்க இருவரும் தாக்கினர். காயமுற்ற மாணிக்கம் மேலுார் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுகிறார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., பழனியப்பன் விசாரித்து சூர்யாவை கைது செய்தார்.195 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது மதுரை : ஒத்தக்கடை நான்குவழிச்சாலையில் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற காளை 65, பெருமாயி 60, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 195 கிலோ கஞ்சா மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X