பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து கால்வாய் சேதம் தண்ணீர் காணாத இரும்பாடி கண்மாய்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சோழவந்தான்-பெரியாறு, வைகை பாசன வசதி பெறும் 210 கண்மாய்களில் 105 கண்மாய்கள் நுாறு சதவீதம் நிரம்பியதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் வரத்து கால்வாய் சேதமடைந்துள்ளதால் இரும்பாடி கண்மாயில் தண்ணீர் இல்லை.இக்கண்மாய்க்குள் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ள போரில் நீர் வற்றியுள்ளது. கடந்தாண்டு கண்மாய் நிரம்பியதும் அருகிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம்

சோழவந்தான்-பெரியாறு, வைகை பாசன வசதி பெறும் 210 கண்மாய்களில் 105 கண்மாய்கள் நுாறு சதவீதம் நிரம்பியதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் வரத்து கால்வாய் சேதமடைந்துள்ளதால் இரும்பாடி கண்மாயில் தண்ணீர் இல்லை.இக்கண்மாய்க்குள் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ள போரில் நீர் வற்றியுள்ளது. கடந்தாண்டு கண்மாய் நிரம்பியதும் அருகிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்தது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.முன்னாள் ஊராட்சி தலைவர் பண்ணைசெல்வம் கூறியதாவது: 13 ஏக்கர் உள்ள இக்கண்மாய்க்கு வடகரை கால்வாய் 19வது மடை வழியாக உபரி நீர் வரும். 250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கடந்தாண்டு சொந்த செலவில் கண்மாய் துார்வாரி நிரப்பப்பட்டது. தற்போது வரத்து கால்வாய் அதிக இடங்களில் மண்மேவி சேதமடைந்துள்ளது. பொதுபணித்துறை அதிகாரிகள் சீரமைத்து தர ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X