பொது செய்தி

தமிழ்நாடு

நீர் வரத்தின்றி வறண்ட ஒன்றிய கண்மாய்கள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி -செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு மேற்கு பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நீர் வரத்து இன்றி வறண்டுள்ளன.இந்த ஒன்றியத்தில் 40 எக்டேர் பரப்புள்ள 19 கண்மாய்கள் 19 உள்ளிட்ட 273 நீர் நிலைகள் உள்ளன. திருமங்கலம் பிரதான கால்வாய் கிழக்கு பகுதியிலுள்ள விக்கிரமங்கலம், அய்யனார்குளம், வாலாந்தூர், செல்லம்பட்டி, சிந்துபட்டி,

உசிலம்பட்டி -செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு மேற்கு பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நீர் வரத்து இன்றி வறண்டுள்ளன.இந்த ஒன்றியத்தில் 40 எக்டேர் பரப்புள்ள 19 கண்மாய்கள் 19 உள்ளிட்ட 273 நீர் நிலைகள் உள்ளன. திருமங்கலம் பிரதான கால்வாய் கிழக்கு பகுதியிலுள்ள விக்கிரமங்கலம், அய்யனார்குளம், வாலாந்தூர், செல்லம்பட்டி, சிந்துபட்டி, நாட்டாமங்கலம், கருமாத்தூர் பகுதிகளில் கால்வாய் மூலம் நேரடி பாசனமும், விரிவாக்க கால்வாயில் கண்மாய்கள் மூலமும் பாசனம் நடக்கிறது. ஆனால் கால்வாய் மேற்கு பகுதியிலுள்ள பாப்பாபட்டி, சடச்சிபட்டி, சிறுபட்டி, எ.கிருஷ்ணாபுரம், பூதிப்புரம், சிந்தலகுண்டு, போடுவார்பட்டி, ஆனையூர் சின்ன கண்மாய், பெரிய கண்மாய், ரெட்டியபட்டி, எம்.அய்யம்பட்டி கண்மாய்கள் மற்றும் குளங்கள் நீர் வரத்து இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. இக்கண்மாய்கள் 58 கிராம கால்வாய் பாசனத்தின் கீழ் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X