பொது செய்தி

தமிழ்நாடு

திருமங்கலத்தில் அமையுமா வனவிலங்குகள் சரணாலயம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருமங்கலம்-திருமங்கலம், சிவரக்கோட்டை பகுதிகளில் புள்ளி மான்கள் தொடர்ந்து வாகனங்களில் அடிபட்டு இறப்பது, விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க சரணாலயம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.இப்பகுதிகளில் கண்மாய்கள், வனத்தில் 500க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசிக்கின்றன. மயில், புனுகு பூனை, கீரிப்பிள்ளை, காட்டுபன்றிகள், பல வகை பாம்புகள், வெளிநாட்டு பறவைகள் உள்ளன. மான், மயில்,

திருமங்கலம்-திருமங்கலம், சிவரக்கோட்டை பகுதிகளில் புள்ளி மான்கள் தொடர்ந்து வாகனங்களில் அடிபட்டு இறப்பது, விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க சரணாலயம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.இப்பகுதிகளில் கண்மாய்கள், வனத்தில் 500க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசிக்கின்றன. மயில், புனுகு பூனை, கீரிப்பிள்ளை, காட்டுபன்றிகள், பல வகை பாம்புகள், வெளிநாட்டு பறவைகள் உள்ளன. மான், மயில், புனுகு பூனை உள்ளிட்ட சில விலங்குகளை மர்ம நபர்கள் பணத்திற்காக வேட்டையாடுகின்றனர். இதற்காக வேட்டை நாய்களை வளர்த்து விலங்குகளை பிடிக்கிறார்கள்.விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கூறியதாவது: சிலர் 2005 சிவரக்கோட்டை கண்மாய் மரங்களை வெட்ட முயன்றனர். மான்கள் அதிகம் உள்ளதால் வெட்ட கூடாது என வழக்கு தொடர்ந்தேன். இன்று வரை வனப்பகுதி, விலங்குகளை பாதுகாக்க போராடி வருகிறோம். இரு ஆண்டுகளுக்குமுன் ரோட்டில் ஒரே மாதத்தில் 26 மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்தன. தற்போதும் மான்கள் அடிபட்டு இறக்கின்றன. விலங்குகளை காக்க சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X