பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்: பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்: பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வை

Added : நவ 13, 2021
Share
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கன மழையால் பாதித்த விவசாய நெற்பயிர்களை, பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.கன மழையால், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் தண்ணீரில் மூழ்கின. பாதித்த பூவாலை, மஞ்சக்குழி பகுதிகளை பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். வடிகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என விவசாயிகள் கோரினர். அமைத்துத் தருவதாக

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கன மழையால் பாதித்த விவசாய நெற்பயிர்களை, பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.

கன மழையால், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் தண்ணீரில் மூழ்கின. பாதித்த பூவாலை, மஞ்சக்குழி பகுதிகளை பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். வடிகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என விவசாயிகள் கோரினர். அமைத்துத் தருவதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஊராட்சி தலைவர் செல்லப்பன், ஒன்றிய செயலர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, நகர செயலர் மாரிமுத்து, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் ரெங்கம்மாள், முன்னாள் ஒன்றிய செயலர் இளங்கோவன், முருகன், செந்தாமரை உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X