தமிழ்நாடு

பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை: சம்பத் குற்றச்சாட்டு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கடலுார் : தொடர் மழை காலத்தில் தீவனம் வழங்காததால் கால்நடைகள் பட்டினியால் வாடுகின்றன என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டினார்.கடலுார் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டு பொது மக்களுக்கு பிரட், பிஸ்கட் வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.
 பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை: சம்பத் குற்றச்சாட்டு

கடலுார் : தொடர் மழை காலத்தில் தீவனம் வழங்காததால் கால்நடைகள் பட்டினியால் வாடுகின்றன என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டினார்.

கடலுார் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டு பொது மக்களுக்கு பிரட், பிஸ்கட் வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது. வெலிங்டன், பெருமாள், வாலாஜா, பரவனாற்றை கண்காணிக்க வேண்டும். நெய்வேலி சுரங்கத்தில் இருந்து தண்ணீரை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வெளியேற்ற வேண்டும்.தற்போதைய மழைக்கு சென்னை நகரம் தத்தளிக்கிறது. அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக மழை பெய்யும் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும்

எதிர்கட்சித் தலைவர் சொல்வது போல், தற்போதைய அரசு சரியான திட்டமிடாமையே தத்தளிப்பதற்கு காரணம். வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு இரண்டு வேளை உணவு வழங்குவதோடு, மருத்துவ முகாம் நடத்தியிருக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது மழையால் பாதித்த கால்நடைகளுக்கு தீவனம் வழங்கினோம். தற்போது மழையில் கால்நடைகள் பட்டினியால் வாடுகின்றன. பயிர் சேதங்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கடலுார் நகரில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது ரூ. 42 கோடி மதிப்பில் வடிகால் வசதி ஏற்படுத்தியது. ரூ. 3.60 கோடியில் வடிகால்களை செப்பனிட்டதால் தற்போதைய மழையில் கடலுார் நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் தப்பின என்றார். அவருடன் குமார், சேர்மன் பக்கிரி, நிர்வாகிகள் காசிநாதன், தங்கமணி, ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X