அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்

Added : நவ 13, 2021
Share
வடலுார் : வடலுார் அருகே தென்குத்து கிராமத்தில் என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமாக ஆய்வு செய்ய வந்த நில எடுப்பு டி.ஆர்.ஓ., உட்பட அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணியில்

வடலுார் : வடலுார் அருகே தென்குத்து கிராமத்தில் என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமாக ஆய்வு செய்ய வந்த நில எடுப்பு டி.ஆர்.ஓ., உட்பட அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை வடலுார் அருகே உள்ள தென்குத்து கிராமத்திற்கு ஆய்வு செய்ய நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., சிவக்குமார், தாசில்தார்கள் அந்தோணிராஜ், செந்தில், ரவி, வி.ஏ.ஒ. வெங்கடேசன் ஆகியோர் வந்தனர்.

அப்போது கிராம மக்கள் மற்றும் நண்பர்கள் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊர் தலைவர் உட்பட யாருக்கும் தகவல் தராமல் எப்படி வந்தீர்கள் என கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடலுார் போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X