பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மண்டல இயக்குனர் ஆய்வு

Added : நவ 13, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் மழை கால முன்னெச்சரிக்கை பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார்.அனைத்து துறை அதிகாரிகளிடமும் பணிகளை கேட்டறிந்தார். சரவணபுரத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்து விவரங்கள் கேட்டறிந்தார். அதற்கு நகராட்சி அதிகாரிகள் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்தனர். இதனால் கோபமடைந்த

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் மழை கால முன்னெச்சரிக்கை பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார்.

அனைத்து துறை அதிகாரிகளிடமும் பணிகளை கேட்டறிந்தார். சரவணபுரத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்து விவரங்கள் கேட்டறிந்தார். அதற்கு நகராட்சி அதிகாரிகள் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்தனர். இதனால் கோபமடைந்த மண்டல இயக்குனர், உண்மை நிலவரத்தை கூறி தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் என எச்சரித்தார்.பஸ் நிலையம் செயல்படவில்லை.

குப்பைகள் சாலைகளிலேயே சேமிக்கின்றனர். சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிப்பதில்லை என்ற புகாருக்கு, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நர்மதா நகரில் இருந்த செயல்படாத சுகாதார வளாகம், சாலைகளில் குவிந்த குப்பைகளை பார்வையிட்டு சரி செய்து தகவல் அனுப்பும்படி அதிகாரிகளிடம் கோபமாக கூறினார்.கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல், மேற்பார்வையாளர் வாசு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X