இந்தியா

'நீட்' தேர்வில் 55.23 சதவீதம் பேர் தேர்ச்சி; புதுச்சேரி மாணவர்கள் சாதனை

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மையங்களில் தேர்வு எழுதிய 4,869 மாணவர்களின் 'நீட்' தேர்ச்சி பட்டியலை சுகாதாரத் துறை பெற்று வெளியிட்டுள்ளது.இதில்கடந்தஆண்டை காட்டிலும் 2.44 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் 'நீட்' நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுதும் நடந்தது. இத் தேர்வை 15 லட்சத்திற்கும்

புதுச்சேரி : புதுச்சேரி மையங்களில் தேர்வு எழுதிய 4,869 மாணவர்களின் 'நீட்' தேர்ச்சி பட்டியலை சுகாதாரத் துறை பெற்று வெளியிட்டுள்ளது.இதில்கடந்தஆண்டை காட்டிலும் 2.44 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் 'நீட்' நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுதும் நடந்தது. இத் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,-மாணவியர்எழுதினர்.தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை https://neet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் மாணவர்களின் இ-மெயில்முகவரிக்கு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.

புதுச்சேரி மையங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தாண்டு 'நீட்' தேர்வு எழுதினர். இவர்களுக்கான முடிவுகள் இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை சுகாதாரத் துறை மத்திய அரசிடம் பெற்று வெளியிட்டுள்ளது.புதுச்சேரி மாணவர்கள் 5,025 பேர்இந்தாண்டு நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.இதில் 4,869 மாணவர்கள் தேர்வு எழுதினர். 156 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.கடந்தாண்டு 720 மதிப்பெண்ணுக்கு 700 மதிப்பெண் எடுத்து மாணவி சுபிக்ஷா அசத்தி இருந்தார். இந்தாண்டு ஒருவர் கூட 700 மதிப்பெண்ணை நெருங்கவில்லை. ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ஆதர்ஷ் 685 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 704-வது இடம் பிடித்துள்ளார்.மாணவர்கள் தியனேஷ் 680 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், ராகுல் 670 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 600 மதிப்பெண்ணுக்கு மேல் 20 மாணவர்களும், 500க்கு மேல் 119 பேரும், 400 க்கு மேல் 386 பேரும், 300க்கு மேல் 847 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் கடந்தஆண்டு 'நீட்' தேர்விற்கு விண்ணப்பித்த 4,925 மாணவர்களில், 4,474 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 2,362 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 52.79 ஆகும். இந்தாண்டு 'நீட்' தேர்வு எழுதிய 4,869 மாணவர்களில் 2690 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் விண்ணப்பிப்பதற்கான 108 தகுதி மதிப்பெண்ணை எட்டி, தேர்ச்சி பெற்றுள்ளனர்.எனவே 'நீட்' தேர்வில் இந்தாண்டு புதுச்சேரி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 55.23 ஆகும். இது கடந்தஆண்டைவிட 2.44 சதவீதம் கூடுதலாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X